Pages

Saturday, April 28, 2012

காதல் வலி..!

தெரிந்திடுமா காதல் வலி
அறிந்திடுமே காதல் விழி
இது கனவா புது உறவா
காதல் ஒரு பல்லாங்குழி
பள்ளம் மேடு தாண்டித்தானே
காதல் வரும் முன்னாலே

மேகம்கூட உன்தன் முகத்தை காட்டிப் போகுதே
தேகம்கூட உன்தன் வரவை விரும்பி கேட்குதே
சுவாசம் முழுதும் கன்னி உன்தன் நினைவு நிரம்புதே
வாசம் வீசும் பூக்கள் உன்தன் பேரைச் சொல்லுதே
மொழிபேசும் உன்வாசம் விழியோரம் உன் நேசம்
புதுசா இருக்கே இந்த அனுபவம்

குருவிக்கூட்டம் இங்கே பறக்கும் மனசுபோல திரியும்
அருவிசாரல்கூட அவ சிரிப்பைப்போல இருக்கும்
தெருவோரம் நடந்தாலே பூப்பூக்கும் மண்மேலே
கடிகாரம் பார்த்தாலே உன் ஓட்டம் தெரியும்
பறந்துவருவியா தன்ன மறந்து வருவியா
இதுதானா காதல் உணரும் வலி

- காகிதன்

(2007ம் ஆண்டு தமிழ்மன்றத்தில் கஜினி என்ற பெயரில் ஒரு சினிமா பாடல் தொனியில் எழுதியது)

மண்..!

உன்னால் எத்தனை
மண்ணைத்தான் தின்ன முடியும்
மண்ணோ உன்போல்
எத்தனை பேரையும்..!

- காகிதன்

தமிழ் தோ(மொ)ழி

இது கனவா
இது நினைவா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!

வழியோரம் நான் நடக்க
வழிசொல்லும் ஒரு கிள்ளை
பழி பாவம் அறியாத
பாங்கான ஒரு முல்லை..!

இது உறவா
இது பகையா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!

பதமாகா மனதோடு இதமாக பேசியவள்
புதிராகத் தோன்றுகிறாள்..!
பயமான மனதோடு
படபடக்கும் என்னிதம்..

இது வரமா
இது சாபமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!

அலைபாயும் மனதோடு
விளையாடும் சிறு மாது..!
நிலைகுலைந்த என்மனது
உணர்ந்திடுமா மெய்நிலையை...

இத நிழலா
இது நிஜமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!

மஞ்சம் வந்துவிட்டாள்
மகரந்தம் பகிர்ந்துவிட்டாள்
மாய உலகிற்கே
எனையழைத்துச் சென்றுவிட்டாள்..!

இது முடிவா
இது தொடரா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!

என்னுடனே இருப்பாளோ
எனதுயிரில் கலப்பாளோ
என்மூச்சில் நிறைவாளோ
எனதருமை தமிழ் தோ(மொ)ழி..!

- காகிதன்