Pages

Monday, December 5, 2011

கலைவாணியே..9





















அன்னையே உன்னையே திண்ணமாய் எண்ணியே
என்னையே உன்னிலே கண்ணியாய் பின்னியே
எண்ணிலா பண்ணிலே உன்னிலை கண்டனன்
வண்ணமாய் மின்னிடுமு னை.

ஆதியாய் அந்தமாய் ஜோதியாய் வேதியாய்
போதியாய் (ஸ்)தூதியாய் நான்முகன் மீதியாய்
ஓலையாய் (ஸ்)வாலையாய் மாயனின் லீலையாய்
காலையாய் மாலையாய் நி(லை)ல்

ஓசையின் நாயகியே மூவுலக வேதியே
பூசையின் முன்னவளே தேவியே பேசுவேன்
உன்புகழை இன்மொழியாய் தீந்தமிழாய் கூசுமே
என்னுள்ளம் உன்நினைவால் தான்

மேன்மை நிறைந்தவளே மேலான நாயகியே
உண்மை சொரூபிணியே பாமகளே என்றும்
தருவே னெனதுகவி உன்னிடத்தில் தந்தே
பெறுவே னுனதாசி யை