Pages

Saturday, October 15, 2016

என்னவளே..!

உலகமே ஒரு நிமிடம் இயங்க மறுத்து
நாயகனோ நாயகியோ இயங்குவதை
சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்
அன்பே உன்னை பார்த்தவுடன்
உன் வடிவிலே பார்க்கிறேன்

நான் உன்னையே பார்க்கிறேன்
நீயோ மண்ணையே பார்க்கிறாய்
ஒரு நிமிடம் நீ நிமிர்ந்து பார்த்தால்
அந்த பூமி கூட தற்கொலை செய்துகொள்ளும்
வேண்டாமடி நீ மண்ணையே பார்

இரண்டு புள்ளிகளை இணைக்கும்
நேர்கோட்டில் சாவிகொடுத்தால் இயங்கும்
பொம்மை போல
பூமிக்கு வலிக்காமலே நடந்து செல்கிறாய்
நானோ உன் கால்களுக்கு நடுவே
சாவியை தொலைத்துவிட்டு
தேடி அலைகிறேன்

காற்றினால் கூந்தல் கலைவதை
உறவாடுவதாக கவிஞன் சொல்வான்
உன் கூந்தல் கலைய முற்பட்டு
காற்றுகூட தோற்றுபோய்
மலைமீது தூக்கிட்டு கொள்ளுமடி

நமக்கும் உலகத்திற்கும் நடுவே
இந்த வாழ்க்கை எப்படியிருக்குமோ
என்று ஏங்கும் மௌன திரையைப்போல
எனக்கும் உன் கண்களுக்கும் நடுவே
உன் கண்ணாடி திரை உன்னை மறைக்கிறது
இல்லையென்றால் உன் கூரிய பார்வைபட்டு
எப்பொழுதோ இறந்திருக்கும் வாய்ப்பை பெற்றிருப்பேனடி...