Pages

Monday, November 5, 2012

கலைவாணியே..10


நித்தமுமென் நித்திரையில் சித்திரமாய் வந்தவளே
முத்தமிழை பத்திரமாய் காத்தரளும் வித்தகியே
பூவுலகி லுன்னையன்றி வேறுவொரு யூகமில்லா
நாவலனி நாவினிலே வா

பூவினிலே நின்றவளே பூவுலகின் பாமகளே
நாவினிலே வந்துவிடு நான்தொழுவேன் கோவிலிலே
ஆழியிலே மூழ்கிபல முத்தெடுத்து தேவியுனை
தூளியிலே ஆட்டிடுவேன் நான்

அற்பனென்தன் கற்பனையில் சொற்பதமும் விற்பதமாய்
நிற்கதியாய் நிற்கயிலே வுன்னினேவே அர்ப்பணமாய்
எப்பொழுது முன்னுருவை யென்மனதில் கொண்டவனென்
சொப்பணமா யென்னாளும் நி(லை)ல்

நாதனென்தன் நாசியிலே நாள்முழுதும் வாழ்பவளே
நாதமெனும் நூலெடுத்து நாசுரத்தால் ஓதிடுவாய்
பூவெடுத்து நாரெடுத்து பூத்தொடுத்து போற்றிடுமென்
நாவிடுக்கில் குந்திடவே வா

- காகிதன்