Pages

Saturday, September 4, 2010

காதலித்துப்பார்..! - வைரமுத்து

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

- வைரமுத்து

கலைவாணியே..8





















பூவித மேவிய மேனியைக் கொண்டனள்
கூவிய செவ்விதழ் புன்னகை தேவியின்
பூமுகம் நெஞ்சினில் வந்திட நாளுமே
என்தவம் செய்தனை யே

ஜோதியி லாடிடும் பூமகள் தேன்முகம்
வீதியில் போகையில் தோன்றுமென் பாதையில்
ஆயிர வாரணங் கொண்டவுன் பூசைக்கு
பாயிரம் பாடிடு வேன்

பல்லவி யில்லாத பாசுரம் பாடியே
எல்லைக ளில்லாத வுன்புகழ் நல்கியே
தொல்லைக ளில்லாத வாழ்வினைத் தந்தவுன்
தில்லைகள் பாடிடு வேன்

செந்தமிழ் நாவினில் வந்திடும் வேளையில்
சிந்தனை செய்திடு மென்மன மந்தியில்
சந்திர சூரிய காலங்கள் பாராமல்
வந்திடுயென் நெஞ்சினிற் குள்

கலைவாணியே..7





















கனவோ யெதுவோ அறியே னெனையே
தனியா யிருந்தும் துணையா யுனையே
நினைந்தே நிதமும் தொழுவே னுனையே
உணர்வா யதையும்நீ யே 

கருவா யுனது னினைவை விதைத்தே
பெறுவே தினமு முனது வரத்தை
தருவா யதனால் தொடந்தேன் தவத்தை
குருவா யிருப்பா யெனக்கு

சுழலும் புவியே உளரும் கவியே
களங்க மிலாத சுரத்தி னொலியே
உளமு முருகி குளிரும் கவியே
தெளிவா யெழுதும் கதை

பசித்தே யெழுந்தேன் கலத்தை யெடுத்தேன்
புசித்தே னுனது வரத்தால் கசித்தேன்
கவியை சுரமாய் வடித்தேன் அறிவாய்
அவையம் தருவா யெனக்கு

வாழ்க்கை..!

கதை சொல்லவா...
கதை சொல்லவா
வாழ்க்கை கதை சொல்லவா

கலையல்லவா
கலையல்லவா
வாழ்க்கை கலையல்லவா

வாழ்க்கை ஒரு பறவை
சிறகு முளைத்துவிட்டால்
பறந்துவிடும்
வாழ்க்கை ஒரு பறவை

வாழ்க்கை ஒரு பயணம்
இலக்கு வந்துவிட்டால்
முடிந்துவிடும்
வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கை ஒரு ஊஞ்சல்
ஆட்டம் அடங்கிவிட்டால்
நின்றுவிடும்
வாழ்க்கை ஒரு ஊஞ்சல்

வாழ்க்கை ஒரு புத்தகம்
படித்து முடித்துவிட்டால்
விளங்கிவிடும்
வாழ்க்கை ஒரு புத்தகம்

வாழ்க்கை ஒரு கவிதை
அர்த்தம் விளங்கிவிட்டால்
சலித்துவிடம்
வாழ்க்கை ஒரு கவிதை

வாழ்க்கை ஒரு கப்பல்
கவனம் இழந்துவிட்டால்
மூழ்கிவிடும்
வாழ்க்கை ஒரு கப்பல்

வாழ்க்கை ஒரு விடியல்
இருளை கடந்துவிட்டால்
விடிந்துவிடும்
வாழ்க்கை ஒரு விடியல்

- காகிதன்

எனக்குப் பழக்கமான...

எனக்கு பழக்கமான
என் சாலையோரத்து
மரங்களே...

அவள் உன்னை கடக்கையில்
என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?

அங்கே பூத்துக்குலுங்கும்
அழகிய மரமொன்று
நடந்து செல்கிறதென்றா?

எனக்கு பழக்கமான
என் காலைநேர
சூரியனே...

அவள் உன்னைப் பார்க்கையில்
ஏன் உன் கண்களை மூடினாய்?

உன்னைவிட பிரகாசமான
அவன் கண்களை பார்த்ததாலா?

எனக்கு பழக்கமான
என் மாலைநேர
குயில்களே...

அவள் குரல்கேட்டு
ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்?

அவள் குரலின்
இனிமை கண்டு
மயங்கி போனதாலா?

எனக்கு பழக்கமான
என் இரவுநேர
சந்திரனே...

அவள் முகம் பார்த்து
என் மேகத்திற்குள் ஒழிகிறாய்?

அவள் முகம் பார்த்து
பூமிக்கு ஒருநிலா
போதும் என்று எண்ணியதாலா?

எனக்கு பழக்கமான
என் தோட்டத்து
ரோஜாக்களே...

ஏன் செடியிலிருந்து
கீழே குதித்து
தற்கொலை செய்கிறீர்கள்?

அவள் கூந்தலேறி
அமரந்துசெல்ல
தகுதி இழந்ததாலா?

- காகிதன்

உன்னைத் தழுவ...

இரண்டு கைகள் இருந்தும்
அது எப்போதும்
பணித்திருக்கவில்லை.

தலையை கோதும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை.

உணவருந்தும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை

நான் குளிக்கும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை

எனக்கான வேலைசெய்யவும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை.

உன்னைத் தழுவ மட்டுமே
பணித்திருக்கிறேன் என் கரங்களை
நீ என் அருகில் இருக்கையிலே....

- காகிதன்

பசி..!

ஏழைக்கு இது
இலவச இணைப்பு
எப்போதும் இதற்கு மட்டு்ம்
இவனிடத்தில்
பஞ்சமே இருக்காது..!


சாகும்வரை கூடவரும்
அழையா நண்பன்
பாவம் செய்யத் தூண்டும்
கண்மறை
கட்டும் துணி..!

பணக்காரன் உணராத
மனித உணர்ச்சி
படுத்தாலும் அடித்தெழுப்பும்
நேரம்தவறா
அழைப்பு மணி..!

கண்ணுறங்கா காவலாளி
கடமைதவறாக்
கண்ணியவான்
இதுயின்றி இயங்காது
உலகம்..!

இல்லாதவனிடம்
நிறைந்து கிடக்கும்
இருப்பவனிடம்
இல்லாமல் போகும்
அட்சயப் பாத்திரம்..!

வாழ பழகிடு..!

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
அதை வெல்ல கொள்ளுநீ வேட்கை
நெஞ்சில் ஏனடா செருக்கு
அதை தூக்கிப் போட்டுநீ நொறுக்கு..!

பாவம் செய்வது தவறடா
கோபம் கொள்வது வீணடா
பாவம் பார்ப்பவன் நீயடா
பாரை வெல்லடா மானிடா..!

தூரம் தானடா இலக்கு
அதை நொடியில் கடந்துநீ விலக்கு
நம்பிக்கை தானடா விளக்கு
அதை மனிதர் உணர்ந்திட விளக்கு..!

வேதம் சொல்லிடும் பாடம்
அதை நாளும் கற்றிடு போதும்
வேசம் போடுவது பாவம்
அதை இன்றே நிறுத்திடு போதும்..!

உண்மை தானடா சத்தியம்
அதை உணர்ந்து இருந்திடு பத்தியம்
நேர்மை தானடா லட்சியம்
அதை கண்டு வென்றிடு நிச்சயம்..!

கொல்லத் துணிந்திடு சோகத்தை
வெல்லத் துணிந்திடு மோகத்தை
சொல்லத் துணிந்திடு உண்மையை
வாழப் பழகிடு மேன்மையாய்..!

பார்த்தேன்... ரசித்தேன்…

நீ உறங்கும்போது உன் இமையின் அழகை ரசிப்பேன்
உனை உறங்கசொல்லி உன் இதழின் சுழிவை ரசிப்பேன்
உன் முகத்தில் சரியும் உன் கூந்தல் அசைவை ரசிப்பேன்
உன் இதழில் புரியும் உன் வெட்க புன்னகையை ரசிப்பேன்

நீ தீண்டும்போது உன் விரலின் நளினம் ரசிப்பேன்
நீ வேண்டும்போது நீ ஏங்கும் விதத்தை ரசிப்பேன்
நீ நிற்கும்போது உன் புடவை மடிப்பை ரசிப்பேன்
நீ நடக்கும்போது உன் கொலுசின் ஜதியை ரசிப்பேன்

நீ ஆடும்போது உன் இடையின் வளைவை ரசிப்பேன்
நீ சிரிக்கும்போது உன் சிரிப்பின் ஒலியை ரசிப்பேன்
நீ பேசும்போது உன் வார்த்தை ஜாலம் ரசிப்பேன்
நீ நாணும்போது உன் மோகம் அதனை ரசிப்பேன்

நீ தும்மும்போது உன் மூக்கின் அழகை ரசிப்பேன்
நீர் பருகும்போது உன் தொண்டை குழியை ரசிப்பேன்
உணவருந்தும்போது உன் உச்சந்தலையை ரசிப்பேன்
உன் தூக்கக்கனவில் நீ உளரும்என் பெயரை ரசிப்பேன்

- காகிதன்

நிலவே..!
















நிலவே..!
நீயும் ஒரு
விலைமாதர்தானோ

உனக்குத்தான் எத்தனை
காதலர்கள்..!

ஒருவேளை உனக்கும்கூட
"அந்த" வினோத நோய்
வந்திருக்கக்கூடுமோ
அதனால்தான் ஏனோ
நீ
உன்னயோ இழந்து இழந்து
இறுதியில்
இல்லாமலே போகிறாயோ..!

- வினவும் காகிதன்

நனை..!

நனைவதற்கு
மழை வருவதில்லை,,!
வரும்போது நனைந்தால்
தவறில்லை..!